Tuesday 29 January 2013

ஆதிநாதரின் வரலாற்று தொடர்ச்சி

கணதரர்களின் பணிகள்:

கணதரர்கள் ஜைன மதத்தின் கடவுள்களான தீர்த்தங்கரர் அருளிய
ஜைன ஆகமங்கள்,உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும்
உண்டான ஞான அறிவை பெறுவதற்க்கும்,ஜைன அறநெறிகளை
காத்து, நூல்களாக தொகுத்து மக்களிடத்தில் சென்றடைய
செய்வது இவர்களின் பணி.இவர்கள் பற்றிய முழு விவரங்களை
பின்னர் பார்க்கலாம்.

ஆதிநாதர் வரலாற்றின் தொகுப்பின் தொடர்ச்சி:


கைலாய மலையில் கடும் தவம் இருந்து
ஞானம் அடைந்த பகவான் ஆதிநாதர்
தனது முனிவர்கள் புடைசூழ, ஜைன
அறஉபதேசங்களை மக்களுக்கு
எடுத்துரைப்பதற்காக நாடு திரும்புகிறார்.
பகவானை வரவேற்ற மக்கள் அவர்
நீண்டகாலமாக கடும் தவம் புரிந்து
திரும்பியுள்ளதால் அவருக்கு ஆகார
தானம் அளிக்கவேண்டும் என்பதனை
மறந்தார்கள்.
இதனை அறிந்த அய்யோத்தி நகரை
சேர்ந்த "ஸ்ரேயன்குமார்" என்பவர்தான்
ஆதிநாதருக்கு முதல் முதலில்
கரும்பு சாற்றினை ஆகாரதானமாக
தருகிறார்.
இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும்
வகையிலேதான்,ஆதிநாதருக்கு "அட்சயதிருதையை" என்கின்ற நாளில்,
ஜைனர்கள் அனைவரும்,ஒன்பது வகையான நவதானியங்களையும்
வைத்து கரும்பு சாற்றினையும் அபிஷேகங்களாக செய்து வழிபாடுசெய்கிறார்கள்.

சக்கரவர்த்தியும் துறவியும்:


நாடு திரும்பிய தீர்தங்கரபகவானகிய
ஆதிநாதரை பேரரசசான பரதன் வரவேற்று முனிவர்களுக்கு உண்டான
பணிவிடைகளை செய்தான்.
மக்களுக்கு தேவையான அறஉபதேசங்களை செய்து வந்து
மீண்டும் கைலாயம் திரும்புகிறார்.

பரதசக்கரவர்த்தியின் கைலாய யாத்திரை:

பரதன் தன்னுடைய அரசை ஆண்ட காலத்தில் 16 வகையான தீய கனவுகளை
காண்கிறான்.
இதன் பலனை அறிய தனது அரச
பரிவாரங்களுடன் ரிஷபதேவரை காண
கைலாயம் செல்கிறார்.
ரிஷபதேவரை சந்தித்து வணங்கி ஆசி
பெற்ற பரதனிடம்,"பரதா உன்னால் காக்க
பட்டு இல்லறத்தில் ஈடுபடும் மக்கள்
அனைவரும், கிருதாயுகம் வரை
ஆகமங்களில் கூறப்பட்டுள்ளவாறு
அறநெறிகளை கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். கிருதாயுகம்
முடிவடைந்ததும் மக்கள் நன்நெறிகளை
எற்க மறுப்பதுடன் மனம் போன போக்கில் கட்டுப்பாடுகள் இன்றி வாழ்ந்து
தர்மத்தை அழிக்க துவங்குவார்கள்!
இதுவே கலியுகத்தின் ஆரம்பம்! என்று
பரதனிடம் பகவான் கூறுகிறார்.
 
அப்பொழுது பகவானிடத்தில், பரதன் தான் பதினாறு கனவுகளை கண்டதாகவும் அச்சம் அடைந்ததாகவும்
அதற்கு உண்டான பலன்களை
அருள வேண்டும் என பணிகிறான்!
-
பகவான் ஆதிநாதர் அதற்கு உண்டானபலன்களை தன் தவ வலிமையால்
அறிந்து கூறியதை அடுத்த பதிவில்
பார்க்கலாம்.

No comments:

Post a Comment