Tuesday 29 January 2013

ஆதிநாதரின் வரலாற்று தொடர்ச்சி

கணதரர்களின் பணிகள்:

கணதரர்கள் ஜைன மதத்தின் கடவுள்களான தீர்த்தங்கரர் அருளிய
ஜைன ஆகமங்கள்,உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும்
உண்டான ஞான அறிவை பெறுவதற்க்கும்,ஜைன அறநெறிகளை
காத்து, நூல்களாக தொகுத்து மக்களிடத்தில் சென்றடைய
செய்வது இவர்களின் பணி.இவர்கள் பற்றிய முழு விவரங்களை
பின்னர் பார்க்கலாம்.

ஆதிநாதர் வரலாற்றின் தொகுப்பின் தொடர்ச்சி:


கைலாய மலையில் கடும் தவம் இருந்து
ஞானம் அடைந்த பகவான் ஆதிநாதர்
தனது முனிவர்கள் புடைசூழ, ஜைன
அறஉபதேசங்களை மக்களுக்கு
எடுத்துரைப்பதற்காக நாடு திரும்புகிறார்.
பகவானை வரவேற்ற மக்கள் அவர்
நீண்டகாலமாக கடும் தவம் புரிந்து
திரும்பியுள்ளதால் அவருக்கு ஆகார
தானம் அளிக்கவேண்டும் என்பதனை
மறந்தார்கள்.
இதனை அறிந்த அய்யோத்தி நகரை
சேர்ந்த "ஸ்ரேயன்குமார்" என்பவர்தான்
ஆதிநாதருக்கு முதல் முதலில்
கரும்பு சாற்றினை ஆகாரதானமாக
தருகிறார்.
இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும்
வகையிலேதான்,ஆதிநாதருக்கு "அட்சயதிருதையை" என்கின்ற நாளில்,
ஜைனர்கள் அனைவரும்,ஒன்பது வகையான நவதானியங்களையும்
வைத்து கரும்பு சாற்றினையும் அபிஷேகங்களாக செய்து வழிபாடுசெய்கிறார்கள்.

சக்கரவர்த்தியும் துறவியும்:


நாடு திரும்பிய தீர்தங்கரபகவானகிய
ஆதிநாதரை பேரரசசான பரதன் வரவேற்று முனிவர்களுக்கு உண்டான
பணிவிடைகளை செய்தான்.
மக்களுக்கு தேவையான அறஉபதேசங்களை செய்து வந்து
மீண்டும் கைலாயம் திரும்புகிறார்.

பரதசக்கரவர்த்தியின் கைலாய யாத்திரை:

பரதன் தன்னுடைய அரசை ஆண்ட காலத்தில் 16 வகையான தீய கனவுகளை
காண்கிறான்.
இதன் பலனை அறிய தனது அரச
பரிவாரங்களுடன் ரிஷபதேவரை காண
கைலாயம் செல்கிறார்.
ரிஷபதேவரை சந்தித்து வணங்கி ஆசி
பெற்ற பரதனிடம்,"பரதா உன்னால் காக்க
பட்டு இல்லறத்தில் ஈடுபடும் மக்கள்
அனைவரும், கிருதாயுகம் வரை
ஆகமங்களில் கூறப்பட்டுள்ளவாறு
அறநெறிகளை கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். கிருதாயுகம்
முடிவடைந்ததும் மக்கள் நன்நெறிகளை
எற்க மறுப்பதுடன் மனம் போன போக்கில் கட்டுப்பாடுகள் இன்றி வாழ்ந்து
தர்மத்தை அழிக்க துவங்குவார்கள்!
இதுவே கலியுகத்தின் ஆரம்பம்! என்று
பரதனிடம் பகவான் கூறுகிறார்.
 
அப்பொழுது பகவானிடத்தில், பரதன் தான் பதினாறு கனவுகளை கண்டதாகவும் அச்சம் அடைந்ததாகவும்
அதற்கு உண்டான பலன்களை
அருள வேண்டும் என பணிகிறான்!
-
பகவான் ஆதிநாதர் அதற்கு உண்டானபலன்களை தன் தவ வலிமையால்
அறிந்து கூறியதை அடுத்த பதிவில்
பார்க்கலாம்.

Thursday 24 January 2013

ஆதிநாதரின் அற்புத உலகம்








கற்பக விருட்ச உலகம்!
சென்ற பதிவில்கூறியபடி,ஜைனத்தின் முதற்கடவுளை அறிந்து கொள்வதற்க்கு முன்
,அவர் தோன்றிய காலத்தை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்!
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்துள்ளது.இதனை சமணமதம் "போகஉலகம்"(கற்பக விருட்ச உலகம்) என்று கூறுகிறது.

   இந்தியாவே உலகின் முதல் பேரரசு

போகஉலகம் என்கின்ற இந்த உலகத்தை,மொத்தம் 32,000 அரசர்கள் ஆட்சி செய்ததாகவும்,இவர்களுக்கு எல்லாம் பேரரசராக "ஆதிநாதர்" என்கின்ற "ரிஷபநாதர்" ஆட்சி செலுத்தி வந்துள்ளார்.ரிஷபநாதரின் பிறந்த நகரம் "அய்யோத்தி" ஆகும்.இவரின் வம்சம் "இஷ்வாகு" என்பதாகும். இவர் தந்தையின் பெயர் நாபிராஜன்.தாயார் பெயர் மருததேவி என்பது ஆகும்.
இவர் சிறப்பாக ஆட்சி செய்து வந்த போககாலத்தில்,மக்கள் அனைவரும் உழைக்க
வேண்டிய அவசியம் இருக்காது.இதற்க்கு காரணம் கற்பகவிருட்சங்களே ஆகும்.கற்பக விருட்சமானது மக்களுக்கு தேவையான உணவுஉடை,ஆபரணங்கள்,மாட மாளிகைகளை தரும்
வல்லமை படைத்தது.இதுதான் போககாலத்தின் அதிசயமாகும்.இந்த காலகட்டத்தில் கற்பகவிருட்சங்கள் மறைய தொடங்குகிறது.இதனால் பசி முதலிய உணர்ச்சிகளை மக்கள் உணரத்தொடங்கினார்கள்.32000
அரசர்கள் மற்றும் மக்கள் உட்பட அனைவரும் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பேரரசரான ஆதிநாதரிடம் முறையிட்டனர்.முக்காலத்தையும் உணர்ந்து கொள்ளும் சக்தி படைத்த ஆதிநாதர் பின்வருமாறு மக்களுக்கு தெரிவித்தார். 
போக உலகத்தின் மக்களே!எதிர் காலத்தில் சில லட்சம் ஆண்டுகளில்,கலியுகம் ஆரம்பமாக இருக்கிறது.இதன் அறிகுறியாக இந்த போகவுலகின் கற்பகவிருட்சங்கள் மறைய ஆரம்பித்துவிட்டது!
ஆதலால்,மக்களாகிய நீங்கள்
நான் கூறுகின்ற வழக்கத்தை கடைபிடியுங்கள் என்று கூறி
உழைப்பின்
முக்கியதுவத்தை உணர்த்தி உலகில் முதன் முதலில்,விவசாயத்தை மக்களுக்கு கற்று தருகிறார்.கலியுகத்திற்காக
விவசாயத்தில் ஒன்பது வகையான தானியங்களை பயிரிடும் யுக்தியையும்,
பழதோட்டங்கள் அமைக்கும் வழிமுறைகளையும் கற்றுத்தந்த
உலகின் முதல் ஞானியும்,விஞ்ஞானியும் ஆவார். 
தனது இருமனைவிகளான யஸஸ்வதி,சுனந்தை ஆகியோர்களுக்கு பிறந்த
நூறு புதல்வர் மற்றும் இரண்டு புதல்விகளான பிராமி மற்றும் சுந்தரியையும் அழைத்து பின்வரப்போகும் கலியுகத்தின் கொடுமையான காலங்களை பற்றி விவரிக்கின்றார்.ஆதிபிரம்மா என்றும் சடைமுடிநாதர் என்றும் போற்றப்படும்ரிஷபநாதர்
விஞ்ஞானம்,கலை,கல்வி,இசை மற்றும் நாட்டியம் முதல் சிற்பசாஸ்திரம்,காமசாஸ்திரம்,
நீதிசாஸ்திரம்,தனுர்வேதம்,நாட்டியம்,
நவரத்திங்களின் தன்மைகளையும் தம்முடைய குமாரர்களுக்குஉபதேசித்தார்.
அது மட்டும் அல்லாது எழுத்து,தொழில்,வாணிபம்
போன்ற ஆறுவகையான தொழில்முறைகளை கற்றுதந்த உலகின் முதல் ஆசான் ஆவார். 
இதில் தனது மகளான ப்ராமிக்கு அகரம் முதல் அனைத்து எழுத்து இலக்கணங்களை
தனது வலது கையால் கற்று தந்தார்.அன்று முதல் இன்று
வரை எழுத்துக்கள் அனைத்தும் வலதுபுறமாக வளர்ச்சியுற்றது. 
இன்னொரு
மகளான சுந்தரியை அழைத்து இடது கையால் கனித இலக்கணமான பூஜ்ஜியம் முதல் எண்கணித முறைகளை கற்று
தருகிறார்.இதன் காரணமாக எண்களின் மதிப்பு இடது புறமாக வளர்ந்தது(01,10,100,1000).இவர்களை தான் ஜைனர்கள் ஜினவாணிகளாக விழிபடுகிறார்கள்.அதுமட்டும் அல்லாது நாடு,நகரம்,கிராமம் என்ற அமைப்புகளை படைக்கிறார்.தனது மூத்த மகனான பரதனுக்கு பொருளியல் மற்றும் சிற்பகலையையும்,இளைய குமாரனான ரிஷபச்சேனர் என்கிறவருக்கு இசை
பயிற்ச்சியை கற்றுத்தருகிறார்.மற்றும் ஒரு மகனான அனந்தவிஜயன்
என்பவருக்கு
கட்டடகலையில் பயிற்ச்சி தருகிறார்.இதை தான் சமணம் "போகபூமி" என்கின்ற பெயர் மறைந்து "கர்மபூமி"என்கின்ற பெயர் நிலைக்கப்பெற்றது.-
நாளை அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியை பார்க்கலாம்.
Posted by Picasa

Monday 21 January 2013

ஜைனம் ஒரு ஆன்மீக புதையல்!!!!!








இந்தியாவில்
ஜைனமதம் என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது பகவான்
மஹாவீரர் தான்! இன்னும் ஒரு சிலர் ஜைனர்தீர்ங்கரர்களின்
சிலைகளை பார்த்து "புத்தர்" என தவறாக நினைத்து கொள்கிறார்கள்.புத்த மதம் என்பது வேறு.
ஜைன மதத்தை தோற்றுவித்தது மஹாவீரர் தான் என்று சிலர் ஜைன வரலாற்றை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள்.ஜைன மதத்தின் இருபத்துநான்காவது தீர்தங்கரராக(கடவுளாக) மஹாவீரர் வணங்கப்படுகிறார்.
அப்படியென்றால்
ஜைன மதத்தை தோற்றுவித்த முதல் ஜைன கடவுள் யார்?
என்று
நீங்கள் கேள்வி கேட்பதை என்னால் யூகிக்க முடிகிறது,பொறுங்கள்!
கூறுகிறேன்
!
   ஜைன  
மதத்தின் இருபத்துநான்காவது தீர்தங்கரராக

(கடவுளாக) விளங்கும் பகவான் மஹாவீரர்க்கு முன் இருபத்து மூன்றுதீர்தங்கரர்கள் உள்ளனர்.
பகவான்
மஹாவீரர்
இப்பூவுலகில் தோன்றி மிகச்சரியாக 2612 வருடங்கள்
ஆகிறது. ஜைனமதத்தின் கடவுள் மஹாவீரர் தோன்றியதே இவ்வளவு பழமைவாய்ந்தது என்றால்,ஜைன மதத்தின் முதற்கடவுள் தோன்றி எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் என்பதனை, இதன் பழைமையே உங்களுக்கு உணர்த்தும்.


ஜைன மதத்தை தோற்றுவித்த முதற்கடவுள் முதல் இருபத்து நான்காவது கடவுளான பகவான் மஹாவீரர் வரை உள்ள ஜைன வரலாற்றை இனி வரும்
பதிவுகளில்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!!
Posted by Picasa