Saturday 2 February 2013

கலியுகத்தின் குறிப்புகள்

1.இருபத்துமூன்று சிங்கங்கள் எந்த ஒரு சண்டையும் இல்லாமல் எனது

பாரத நாடெங்கும் சுற்றி வந்ததின் பலன் என்ன? என்று

பகவானிடம் கேட்க பகவான் இதற்கு பதிலாக,


"பரதா! நீ
இருபத்து மூன்று சிங்கங்களை கனவில் கண்டதால்,

என் காலத்திற்கு பிறகு இருபத்து மூன்று தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள்.

இவர்கள் காலத்தில் பொய்காட்சியினர் அதிகம் தோன்ற மாட்டார்கள்!என்று கனவின் முதல் பலனை கூறுகிறார்".

2.ஒரு சிங்ககுட்டி தனியாக நடைபோடுகிறது இதனை தொடர்ந்து சில

மான்கள் செல்கின்றன! இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

இறுதி தீர்த்தங்கரராக தோன்றப்போகும் வர்த்தமானர் மகாவீரர் காலத்தில்

பொய் காட்சியினர் அதிகமாக உருவாகிவிடுவார்கள் என்பதே இதன்

பலன்! என்று கூறினார்.

3.யானை சுமக்ககூடிய பெரும் சுமையை ஒரு குதிரை சுமக்க முடியாமல்

சுமந்து சென்றது.இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

மாபெறும் மாமுனிவர்கள் தாங்கள் ஏற்றுநடத்த வேண்டிய மஹாவிரதங்களை

முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவார்கள்!முனிவர்களுக்கு

இன்னலை ஏற்படுத்தும் துர்சக்திகள் தோன்றும்! என பலன் கூறினார்.

4.ஆடுகள் தனக்கே உரியதான உணவு பழக்கங்களை மறந்து காய்ந்துபோன

சறுகுகளை உண்பதாக நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பரதன் கேட்க,


ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

அறநெறிகளை கற்றுத்தந்த குருவாக இருந்தவர்கள் தன் கடைமைகளை

மறந்து தாழ்ந்த நிலையை அடைவார்கள்! என்று கூறினார்.

5.ஒரு யானையின் மீது பல குரங்குகள் அமர்ந்து செல்கின்றது!

இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

நன்மை,தீமை அறியாத சுயநலம் மிக்க அரசர்கள்(ஆட்சியாளர்கள்)

தோன்றி நீதிக்கு புறம்பாக நாட்டை ஆள்வதற்கு தோன்றுவார்கள்.

என பதிலுரைத்தார்.

6.ஆந்தைகள் காகங்களால் சூழப்பட்டு துறத்தபடுகிறது இதன் பலன் என்ன? என்று பரதன் கேட்க,

ஆதிநாதர் பின்வருமாறு கூறுகிறார்:

பொய்யாக கூறப்படும் சம்பவங்களையே மக்கள் கலியுகத்தில் எற்றுகொள்வார்கள்.


இவ்வாறு
ஆதிநாதர் பரதனுக்கு கலியுகத்தின் குறிப்புகளை சூட்சமமாக
உலகத்திற்கு
உணர்த்தினார்
-தொடரும்..................

No comments:

Post a Comment