Saturday 19 January 2013

அழிவில்லாத ஜைனம்(சமணம்)

இந்திய
கலாச்சாரத்தில் தொன்மையான,பெருமை வாய்ந்த ஆன்மீக மதமான ஜைன மதத்தில்


1.திகம்பர ஜைனர்கள் என்றும்
2.ஸ்வேதாம்பர ஜைனர்கள் என்று
இரு
பிரிவுகள் உள்ளது.தமிழக ஜைனர்கள்(சமணர்கள்) திகம்பர பிரிவை சார்ந்தவர்கள்.தமிழகத்தில் வாழும் மார்வாடிகள் பெரும்பாலும் ஸ்வேதாம்பர பிரிவை சார்ந்தவர்கள்
இவர்கள் தற்பொழுது விழுப்புரம் மாவட்டம்,திருவண்ணாமலைமாவட்டம், வேளூர்மாவட்டம் ,காஞ்சிபுரம்மாவட்டம்,தஞ்சை,மன்னார்குடி,திருவாருர்,தீபங்குடி,கும்பகோணம் ஆகியபகுதிகளில் வாழுகின்றனர்.இவர்களுக்கு நைனார் என்ற ஜாதி பட்டத்தில் அழைக்கபடுகிறார்கள்.
 
 
 
 
தென்
மாவட்டங்களில் ஜைன மதத்தினர்(சமணர்கள்) சிறப்பாக வாழ்ந்ததற்கு அடையாளமாக எராளமான ஜைன குகை கோவில்கள்,எராளமான கல் வெட்டுக்கள்,ஜைன கல் சிற்பங்கள்,ஜைன நிர்வாண முனிவர்கள்வாழ்ந்த சமண கல் படுக்கைகள்,ஜைன மதத்தின் கடவுள்களான தீர்தங்கரர்களின்

சிலைகள் மற்றும் காலத்தினால் அழியாத அஜந்தா,எல்லோராகுகைகளை போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில்
கலைநயம்
மிக்க மூலிகை வண்ண சமண ஒவியங்களை இன்றும் காண முடியும்.(சிலர் இந்தியாவில் அஜந்தா-எல்லோராவில் உள்ள அழியாத குகை
ஒவியங்கள்
போல் வேறு எங்கும் இல்லை என்று தவறாக நினைகின்றனர்)இது மட்டும் அல்லாது மன்னர் ஆட்சி காலத்தில் ஜைன கோவில்களுக்கு
அளித்த
மானியங்கள்,குளங்கள் மற்றும் ஏரிகள் வெட்டியதற்கான கல்வெட்டு  சான்றுகள்
உள்ளது.இது மட்டும் அல்லாது நார்த்தா மலை,கழுகு மலை, ஆனைமலை,கொல்லிமலை,வெள்ளிமலை,மற்றும் மதுரை மாவட்டம்,நாமக்கல் மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்டம்,புதுச்சேரியில் உள்ள அரிக்கன்மேடு போன்ற இடங்களில் காலத்தினால் அழிக்க முடியாத சான்றாக உள்ளது.
இதில்
வருந்ததக்க செய்தி என்னவென்றால் கணிமவளங்களை சுரண்டும்
நபர்களால்
, இந்த அழியாத சின்னங்களுக்கு ஒரு சில இடங்களில் அழிவு
ஏற்பட்டு
உள்ளது
என்பதை யாராலும் மறுக்க இயலாது!!!!!!

No comments:

Post a Comment