Wednesday 6 February 2013

கலியுக குறிப்புகளின்-II

கலியுகத்தின் குறிப்புகள்:


7.
அகோர உருவம் கொண்ட பூதங்கள் எங்கும் நடனம் புரிவதாக நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,
கலியுகத்தில் புதுமை என்கின்ற பெயரில் எங்கும் கலாச்சார சீரழிவு
ஏற்பட்டு, மக்கள் தங்களின் கலாச்சார பெருமைகளை மறந்துவிடுவார்கள்!என்று பதிலுரைத்தார்.


8.
ஒரு நீர்நிலையின் நடுப்பகுதி முற்றிலுமாக வற்றி(காய்ந்து),இயற்கையிற்கு மாறாக அதனை சுற்றி நீர் சூழ்ந்துள்ளது போல நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக ,

கலியுகத்தின் ஐந்தாம் காலத்தில், உலகத்தின் நடுவில் உள்ள மத்திய நாடுகளில்
,தர்மம் கெடும்! என்று விளக்க உரைஅளித்தார்.

9.
ஒரு சமவெளியில் நவரத்தின குவியல்கள் மலை போன்று குவிந்து இருக்கின்றது
.ஆனால் அதன் பொலிவிழந்து அழுக்குடன் காணப்படுகிறது!
நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,உண்மையான அறவொழுகத்துடன் தவம் மேற்கொள்ளும்
தவமுனிவர்களுக்கு கலியுகத்தில் ஏழுவகையான தவ வலிமைகள்
ஏற்படாமல் போகும்! என பதிலுரைத்தார்.


10.
உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து ஒரு நாய் உணவு சாப்பிட்டது.மேலும் அதற்குபூசை
பொருட்களால் பூசை செய்யப்படுகிறது! நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான்
இதற்கு பதிலாக,
மக்களிடையே நன்றி உணர்வு என்பது இருக்காது,உத்தம குணம் படைத்தவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள்!அற்ப குணம் படைத்தமனிதர்கள்
சிலர் கடவுளை போல போலியாக உலவுவார்கள்!

11.
என் கனவில் ஒரு கட்டுடல் மிக்க இளம் காளை மிரண்டு ஒடுகிறது! நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,கலியுகத்தில் பல இளைஞர்கள் தனது வாழ்கையின் நெறிகளை கடைபிடிக்கமறுப்பார்கள்
!

12.
சந்திரனை சுற்றி பரிவட்டம் தோன்றியதை கண்டேன்! நான் கண்ட கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,வரப்போகும் கலியுகத்தில் தீர்தங்கரர்களுக்கு உண்டான ஞானங்களை போல்மற்ற
முனிவர்களுக்கு ஏற்படாது!
13.
சூரியன் மேகங்களால் மூடப்பட்டதை கண்டேன்! இந்த கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,
தீர்தங்கரர்கள் உருவாக மாட்டார்கள்! என ஒரே வரியில் பதிலளித்தார்.
14.
இரு அன்னப்பறவைகள் இணை பிரியாது பறந்து செல்கிறது நான் கண்டஇந்த கனவின் பலன் என்ன
? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,உண்மையான தவ முனிவர்கள் ஒருமையில் சஞ்சாரம் செய்ய இயலாது!
15.
ஒரு மரத்தோப்புகளில் உள்ள மரங்கள் அனைத்திலும் உள்ள இலைகள்உதிர்ந்து
காணப்படுகிறது!இந்த கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,
ஆண்களும்,பெண்களும் மனத்தூய்மையின்றி நல் ஒழுக்கங்களைஉதிர்த்து
வீற்றிருப்பர்!
16.
எங்கும் இலை சருகுகள் குவியலாக இருக்க கண்டேன்.இது நான் கண்ட16வது கனவு. நான் கண்ட இந்த இறுதி கனவின் பலன் என்ன? என்று பகவானிடம் பரதன் கேட்க பகவான் இதற்கு பதிலாக,கலியுகத்தின் இறுதி காலத்தில் தாவரங்கள் அனைத்தும் தனக்கே உரியதானமருத்துவ
பண்புகளை இழந்து காணப்படும்!இவை அனைத்தும் வரப்போகும் கலியுகத்தில் நடக்க இருக்கும்உண்மைகள்! இவையே உனக்கு கனவாக தோன்றியுள்ளது என்று  கூறி
பரதனை அவன் நாட்டிற்கு வழியனுப்பி வைத்தார். ஆதிநாதர் வரலாற்றை மேலும் அறிந்து கொள்வதற்கு முன் தமிழ்நாட்டிலுள்ள சில திகம்பர ஜைன திருத்தலங்களை பற்றிதெரிந்து
கொள்வோம்!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment