Sunday 23 June 2013

உலக சான்றோர்கள் மற்றும் தலைவர்கள் பார்வையில் சமண மதத்தை பற்றிய கருத்துக்கள்:

பேரறிஞர் கார்டுவெல்:


தமிழகத்திலும் இந்தியாவிலும் சிறப்புடன் விளங்கிய ஜைன மதம் அரசியலில் மட்டுமல்ல எல்லாதுறையிலும் மக்களை மேன்மைபடுத்தினர்.உண்மையில் அவர்களின் காலமே நாகரிகத்தின் பொற்காலம் என குறிப்பிடுகிறார். 

 

 டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் குடியரசு தலைவர்):


இவர் எழுதிய (INDIAN PHILOSOPHY) இந்திய தத்துவங்கள் என்னும் நூலில் நான்கு வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே ஜைனம் (சமணம்) சிறந்து விளங்கியது என்றும், ஜைன மதத்தின் முதல் கடவுள் ரிஷபநாதர் (ஆதிநாதர்) என்று கூறுகிறார்.

 

 டாக்டர் ஹெர்மன் ஜெகோபி (வரலாற்று பேராசிரியர் LP டெஸிடோரி ITALY):


இவர் ஜைன மதம் மற்ற எல்லா சமயங்களை விட தொன்மை வாய்ந்தது என்றும்,மக்களை சீர்திருத்திய புனிதமான மதம் என்றும் கூறுகிறார்.

 

ஸர் பட்டம் பெற்ற மறைந்த தமிழ் பேரறிஞர்R.K.சண்முகம் செட்டியார் அவர்கள்கூறியது:

 

தமிழின் மொழியின் இலக்கியம் வளர்ந்ததில் ஜைனர்களின் பங்கு மிகவும் பெரியது.திருக்குறள்,சிலப்பதிகாரம்,

சீவகசிந்தாமணி,நாலடியார் மற்றும் இலக்கண நூல்கள்,பெரும்கதை நூல்கள் உட்பட பல உயரிய தமிழ் காவியங்களை படைத்தவர்கள் சமணப்புலவர்களே என்றும்,இவர்களின் தமிழ்தொண்டில் பல அரிய கலை பொக்கிஷங்களை இந்த உலகம் பெற்றிருக்கிறது என்கிறார்.

 

டாக்டர் பேராசிரியர் ஹாஜிமே நாஹ்முரா:

சீன மொழியில் எழுதப்பட்ட திரிபீடகம் என்கிற புத்தநூலில்ஜைனமதத்தின் முதல் கடவுள் ரிஷபநாதரை(ஆதிநாதரை) பற்றி பல குறிப்புகள்உள்ளதுஎன்கிறார்.

  ஷட்சாஸ்திரம் என்னும் பழமையான சீனநூலில் முதல் அத்யாயத்தில் ரிஷப தேவரை "பகவத்" என்று அழைக்கப்பட்டு இவருடைய சீடர்களே முதன் முதலில் அஹிம்சையை பரப்பினர் என்றும்,பிடகிரந்தம் என்னும் நூல் சீன மொழியில் (இதுவும் ஒரு ஜைன நூல்) கிபி 519ல் போதிருசி என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு,திரிபீடகம் என்னும் சீன புத்த மத நூலில் சேர்த்துள்ளார்.

 

 ஜப்பானியர்கள்

  ஜப்பானில் ஜப்பானியர்கள் விருஷப நாதரை (ஆதிநாதரை) "ரோக் ஷேவ்" என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர்.

 

 

 

இலங்கையில் ஜைன மதம்:

  இலங்கையில் மகாவம்சம் என்ற நூலில் தற்பொழுது இலங்கையில்உள்ளஅனுராதாபுரம் என்னும் இடத்தில், கி.பி ஐந்தாம் நூற்றாண்டுவரைஆதிநாதர்(ரிஷபநாதர்) கோவில் ஜைன புராதான வழிபாட்டு ஸ்தலமாகஇருந்ததாககுறிப்பிடப்பட்டுள்ளது

 

 R.G ஹர்ஷே(டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர்)

தற்பொழுது அலாஷ்யா என்று அழைக்கப்படும் இடத்தில் கிறுஸ்து பிறப்பதற்கு முன் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்த சிலை ரிஷபதேவர்(ஆதிநாதரின் சிலை) என்றும்.இந்த நாட்டு மக்கள் பனிக் மொழியில் ரிஷீப் என்கின்ற சொல்லில் ஆதிநாதரையும் அவரது சின்னமான எருதையும் வழிபட்டு வந்துள்ளனர் என்கிறார்.மேலும் அலாஷ்யா நாட்டில் ஸஸ்மாரா என்கிற இடத்தில் கவிதை நடையில் உள்ள கல்வெட்டில்,ஆதிநாதர்(ரிஷபநாதர்) எல்லா கர்மங்களையும் வென்று முழுதுணர் ஞானியானார் என்றும் அவரது சீடர்கள் உலகம் முழுவதும் ஜைன அஹிம்சை நெறிகளை முதல்முதலில் பரப்பினர் என்றும் பொரித்துள்ளதாக கூறுகிறார்.

 

 


 

மத்திய ஆசியா முதல் சோவியத் வரை ஜைன மதத்தை பற்றி உலக புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்து:

  சோவியத் ரஷ்யாவில் அல்மேனியாவிற்கு அருகே உள்ள கரீமர்ப்யூலா(சிகப்பு மலை என்று அர்த்தம்) ஆதிநாதரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.பாபிலோனியாவில் இஸ்பேசூர் என்னும் நகரத்தில்
எருது சின்னங்களுடன் ரிஷபநாதரின்(ஆதிநாதரின்) சிலை கண்டுபிடித்தார்கள்.இஸ்பெக்ஜூர்,மவாதியா,ஜீன்ரேவி போன்ற இடங்களில் ஆதிநாதரின் நிர்வாண சிலைகள் கிடைத்துள்ளன.

 

 பாலகங்காதர திலகர்:

 ஜைன மதத்தை தோற்றுவித்த மூலக்கடவுள் மஹாவீரர் அல்ல,அந்த மதத்தின் முதற் கடவுள் ஆதிபகவான் என்கின்ற ரிஷபநாதர் ஆவார்.ஜைன மதத்தையும் இவருக்கு முன் உள்ள 23 தீர்தங்கரர்களின் கருத்துக்களை பரப்பியவரும் ஆன 24வது தீர்தங்கரர் மஹாவீரர் என்று எழுதியுள்ளார்.

 

 

 ஜெர்மன் பேரறிஞர் ஹெர்ட்டல்:

ஜைனர்களின் இலக்கிய படைப்புகள் வியப்பையும்,மகிழ்ச்சியையும்ஏற்படுத்துகிறது.ஜைனர்கள் இல்லையென்றால் பெரும்பாலான இலக்கியம் முழுமை அடைந்திருக்காது.

 

இத்தாலி L.P. தெஸ்ஸிதோரி இலக்கியவாதி:

ஜைன மதத்தின் போதனைகள் யாவும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.நவீன உலகம் விஞ்ஞானத்தில் முழு வளர்ச்சிஅடையும்பொழுது இதன் பெருமை தெரியும் என்கிறார்.


 

 ஜார்ஜ் பெர்னார்டுஷா (புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்)

  மறுபிறப்பு என்று ஒன்று இருந்தால் அடுத்த பிறவியில் இந்தியாவில் ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்து,ஜைன மதத்தின் அனைத்து தத்துவ கோட்பாடுகளையும் கற்றுகொண்ட மனிதன் ஆவேன்.இதன் போதனைகளையும் அஹிம்சை தர்மத்தையும் கண்டு பிரமித்த நான் அன்றுமுதல்எனது வாழ்வு முடியும் வரை உணவில்இறைச்சியும்,மதுவையும்

தவிர்த்துவிட்டேன்என்கிறார்.

இந்த கருத்து காந்தியடிகள் புதல்வர் தேவதாஸ் காந்தியிடம் உரையாடிகொண்டிருந்த சமயத்தில் கூறியதாக அப்போதைய பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டி

 

 அபுல்பாஸல்:

இவர் 11ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மொகலாய மாமன்னர் அக்பர் அரசவையில் தலைசிறந்த அமைச்சர் ஆவார்.இவர் பின்வருமாறு கூறுகிறார்.இந்தியாவை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட மாமன்னன் அசோகர்,ஜைன மதத்தை காஷ்மீர் வரை பரப்பியதாக எழுதியுள்ளார்


 

தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகள்:

  அஹிம்சையை இந்த உலகிற்கு போதித்த ஜைன மதத்தில், கொல்லாமையை இந்த உலகம் முழுவதும் பரப்பிய மஹாவீரர், எல்லோரலும்வணங்கப்படக்கூடிய தகுதி படைத்தவர்.


 

முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி:

1981ல் பார்லிமெண்டில் ஒரு சில உறுப்பினர்களின் எதிர்கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார். 
ஜைனத்தின்24 தீர்தங்கரர்கள் போதித்த அஹிம்சை தர்மத்தை பின்பற்றி காந்தியடிகள்இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித்தந்துள்ளார்.நமது நாடும் ஜைன மதமும் அஹிம்சை வழியில் முழு நம்பிக்கையுடன் செயல்படுகிறது.ஆகையால் ஜைன மத கோட்பாட்டின் மேன்மையான வழியை எனது அரசாங்கம் பின்பற்றும்!


 

யஜூர் வேதத்தில் ஜைனம்:

இந்துசமயத்தில் பழமையான வேதங்களில் ஒன்றான் யஜூர் வேதத்தில், 19வது அத்யாயத்தில் 14வது சுலோகத்தில் "அருகக்கடவுளே(ஆதிநாதர்) பல கொள்கைகளை உலகிற்கு போதித்து,உனது நிர்வாண உடலை அணிகலன்களாய் பூண்டுள்ளாய்,எல்லா உயிர்களுக்கும் போதிக்கும் திறன் வேறு யாரிடத்தில் தோன்றும்?,நீர் பெற்றிருக்கும் முழுதுணர் ஞானம் இந்த அண்டம் முழுவதும் காணப்படுகிறது,எல்லா உயிர்களையும் காத்து, காமத்தை வென்றவனே!என போற்றுகிறது

 

 


 

யோகவாசிட்டம்:


 

இந்து சமயத்தின் பழமையான வடமொழி நூலான யோகவாசிட்டத்தில் 15வது அத்தியாயத்தில் 8வது சுலோகத்தில் ஸ்ரீராமபிரான்கூறியதாக

பின்வருமாறு கூறுகிறது-

இராமன் என்கின்ற நான் இளவரசன் இல்லை.உலக பொருள்களின் மீது எனக்கு ஆசைகள் கிடையாது.ஜைன கடவுள்களைப்போல (தீர்தங்கரரை போல) எனது உள்ளத்தில் எப்பொழுதும் அமைதியாகவும்,அஹிம்சையாகவும் இருக்க விரும்புகின்றேன். 

 

 

 டாக்டர் ஹெர்மன் ஜக்கோபி(ஜெர்மன் ஆராய்ச்சியாளர்):

இந்திய சமயங்களை நான் ஆராய்ச்சி செய்ததில் ஜைன சமயம் ஒரு பழம் பெரும் மதம் என்றும்,இந்த மதம் எந்த மதத்தில் இருந்தும்கிளையாக

தோன்றவில்லை என்றும்,பழங்கால இந்தியாவின் தொன்மைகளையும், சமய வாழ்கை முறைகளையும் நாம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,முதலில் ஜைனத்தை படித்து பார்க்காமல் இதனைஉணரமுடியாது

என்றும் கூறியுள்ளார். 

 

 

 

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜைன மதம்:

  உலக புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சிதாரோவில் கிடைத்த புதைபொருள்களின் ஆயுட்காலம் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும், அங்கு கிடைத்த சிற்பங்களில் ஜைன மதத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக் சின்னங்களும்,ஜினாய நம என்ற வாழ்த்துக்களுடன் கூடிய முத்திரைகளும்,நிர்வாணயோக நிலையில் உள்ளரிஷபநாதரின்

(ஆதிநாதரின்) சிற்பங்களும்,ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள குளங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment